Show all

இந்தியாவில் ஒரு பணக்காரனை உருவாக்க 67 பேர் ஏழையாக்கப் படுகின்றனராம்

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனி நபரின் சொத்து, நிதி ஆதாரங்கள் அடிப்படையில் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில்; பணக்கார நாடு பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் என்றும், அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சீனா நாட்டை சேர்ந்த பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. ஜப்பானுக்கு 3வது இடம் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து ஜப்பான் அடுத்த இடத்தில் இருக்கிறது. 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன் ஜப்பான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் இந்தியா பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்தைப் பெறுகிறது. ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் இந்தியாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் பெற்றுள்ளன.

இந்தியாவின் 67 விழுக்காடு சொத்து ஒரு விழுக்காடு இந்தியர்கள் வசமே உள்ளது என்பது ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல். அதாவது பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பணக்காரர்களின் சொத்துகள் மட்டுமே அதிகரிக்கிறது என்பது தான் இதன் பொருள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,684

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.