Show all

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது ! தல அஜித்திற்கு நல்ல காலம் பொறக்குது !

சிறுத்தை சிவா என்றாலே தெறித்து ஓடும் தல ரசிகர்கள் ! .படத்தின் பெயர் "v" யில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய சிவா , படத்தை எப்படி சிறப்பாக எடுப்பது என்பதில் கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்லலாம். வீரம் , வேதாளம் போன்ற படங்கள் சிறப்பான வெற்றி இல்லை என்றாலும் , அஜித் என்றால் உயிரைக்கூட தர தயாராகும் அளவிற்கு  அன்பு கொண்ட ரசிகர்களால் இந்த படங்கள் வெற்றி பெற்றது. வேதாளம் படத்தின் போதே ஒட்டு மொத்த ரசிகர்களும் போதும் தல இதற்கு மேல் சிவா வுடன் எந்த படத்திலும் இணையாதீர்கள் என்று கதறினார். 

இருந்தாலும் சிவாவிற்கு பெரிய மனதோடு விவேகம் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்தார் அஜித். என்ன தான் அஜித் கடும் உழைப்பு , ஸ்டைலிஷ் லுக்  என அனைத்தையும் அர்ப்பணித்து நடித்திருந்தாலும் ,கதை நன்றாக இருந்தாலும் படம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் கோபத்தையே வரவழைக்கிறது. எதை வேண்டுமானாலும் ஒப்புக்கொள்ளாம் ஆனால் இறுதிக்காட்சியில் காஜல் அகர்வால் கத்தும் , மன்னித்து விடுங்கள் காஜல் அகர்வால்  பாடும் பாட்டை தேவையில்லாமல் சேர்த்து படத்தின் அழகையே கெடுத்துவிட்டார் சிவா . 

இதற்கு பிறகு கூட விசுவாசம் என்ற படத்திற்கு சிவாவுடன் இணைகிறார் . ஏன் தல சிவா கூடவே படம் பண்றிங்க , தயவு செய்து வேறு இயக்குனர்களுடன் இணைந்து நடித்தால் நூறு என்ன ஆயிரம் நாட்கள் படம் ஓடுமே என்று கேட்ட ரசிகர்களிடம் அஜித் கூறிய காரணம் இது தான். சிவா என்னிடமிருந்து  ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனராக தான் செல்ல வேண்டும் அதனாலேயே அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் .

எது எப்படியோ ! தலைக்கு எம கண்டம் முடிந்து சுக்ரன் உச்சத்தில் வரப்போகிறான். ஆம் ! பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் தற்போது அஜித்திற்கு இன்னொரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசுவாசம் படம் நிறைவுற்ற பிறகு இப்படத்தை பற்றி இன்னும் பல தகவல்கள் வெளியே வரும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.