Show all

சொந்த பலத்தால் வெற்றிபெற முயற்சி செய்ய வேண்டும்! பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பதிலடி

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் நடக்கும் தேர்தல் விவாதங்களில் தங்களை வம்பிழுக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், கட்சிகளின் கருத்துப் பரப்புதல் தீவிரமடைந்துள்ளது. குஜராத் மாநிலம் பாலன்பூரில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி குஜராத் தேர்தலில் தலையிடுகிறார். அவர் அகமது பட்டேலை ஏன் குஜராத் முதல்வராக்க விரும்புகிறார். பாகிஸ்தான் தூதர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். மணிசங்கர் ஐயர் வீட்டில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் மணிசங்கர் ஐயருடன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். மூன்று மணிநேரம் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் மணிசங்கர் ஐயர் என்னை துணிச்சலாக விமர்சனம் செய்தார் என்றார். குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், ‘இந்தியா, தனது நாட்டில் நடக்கும் தேர்தல்களில் பாகிஸ்தானை தொடர்புபடுத்திக் கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதன்மூலம் வெற்றி பெறுவதைத் தவிர்த்து சொந்த பலத்தால் வெற்றிபெற முயற்சி செய்ய வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது மட்டுமின்றி பொறுப்பற்றது. மிகப்பெரிய நாட்டின் மிகப் பெரிய பொறுப்பில் உள்ள தலைமை அமைச்சர் இது போன்ற செயலில் ஈடுபடுவது நாகரீகமற்றது

என்று கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,633

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.