Show all

உலக ஹாக்கி லீக்: வெண்கலம் வென்றது இந்தியா, சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இப்போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

நேற்று மாலை மாலை 5.15 மணிக்கு நடைபெற்ற வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் தரவரிசையில் ஆறாவது இடத்தில உள்ள இந்தியாவும் ஐந்தாவது இடத்தில உள்ள ஜெர்மனியும் மோதியது. அபாரமாக ஆடிய இந்திய அணி ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி  வெண்கலப் பதக்கம் வென்றது. 20வது நிமிடத்தில் எஸ்.வி.சுனிலும், 57வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கும் தலா ஒரு கோல் அடித்தனர். கடந்த ஆண்டும் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று 7:30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியான இறுதிப்போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அர்ஜெண்டினா மற்றும் இரண்டாவது இடத்தில உள்ள ஆஸ்திரேலியா  அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. ஆஸ்திரேலிய அணியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா வெள்ளிப் பதக்கம் வென்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.