Show all

பாஜகவிலிருந்து விலகுகிறார் யஷ்வந்த் சின்ஹா! மோடியால் மக்களாட்சி மாண்பு கொட்டு விட்டதாக அச்சம்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவுடனான அனைத்துத் தொடர்புகளையும் இன்று முடித்துவிட்டு, விலகிவிட்டேன் என்று மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து நடத்திய ராஷ்ட்ரி மன்ச் எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது: பாஜகவிலுந்து இன்று முதல் நான் விலகிவிட்டேன். அனைத்துக் கட்சி அரசியலில் இருந்தும் நான் இன்றுடன் விடைபெற்று அரசியலில் துறவறம் செல்கிறேன். இனிமேல் எந்தவிதமான அரசியல் கட்சிகளிலும் நான் சேரப்போவதில்லை. 

இப்போது தலைமைஅமைச்சராக இருக்கும் மோடியின் ஆட்சியில் மக்களாட்சி மாண்பு மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது. இதற்கு முன் இருந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நாடாளுமன்றம் செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

ஆனால், தற்போது இருக்கும் தலைமைஅமைச்சர் மோடி நாடாளுமன்றம் செயல்படாமவிட்டால் மகிழ்ச்சி அடைகிறார். நாடாளுமன்றம் முடங்கினால், எதிர்க்கட்சிகளுடன் பேசி அதற்கான தீர்வை தேட மறுக்கிறார்.

ஒரு வகையில் நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பது தற்போது இருக்கும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு மகிழ்ச்சியைத் தரும். ஏனென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியி மூத்த தலைவர் ஜெயந்த் சவுத்ரி, லூலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், உதய் நாராயன் சவுத்ரி, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எந்தக் கட்சியிலும் இனி சேரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஐக்கிய முன்னணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.