Show all

காய்கறிகள் மாதிரி, உங்கள் பணமும் இனி அழுகிக் காணாமல் போகும்!

காய்கறி அழுகுவது போல இனி உங்கள் பணமும் அழுகும். நமது தமிழ்ப் பெண்கள் அஞ்சறைப் பெட்டியில் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள்களைச் செல்லாததாக்கி சேமிப்பைக் கேள்விக் குறியாக்கிய ஒன்றிய பாஜக அரசு. இனி வங்கியில் போட்ட பணமும் அழுகிப் போகும் என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறது.

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: வங்கியில் பணம் எடுத்தாலும் கட்டணம், போட்டாலும் கட்டணம். வங்கியில் பணத்தை வைப்பு செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வரலாற்று அவலம் அரங்கேற்றப்படுகிறது. 

வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது நேற்றே விஜயா வங்கியை இணைத்துக் கொண்ட பரோடா வங்கி தொடங்கி விட்டது. பாங்க் ஆப் இந்தியா, பி.என்.பி வங்கி, ஆக்சிஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி ஆகியவையும் விரைவில் இதேபோல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம் என்று தெரிவிக்க உள்ளனவாம். 

இப்போதைக்கு வங்கிகள் குறிப்பிட்ட அளவு பணம் எடுத்தல் சேவையை இலவசமாக வழங்கும், அதேபோல் பணம் கட்டும் சேவையையும் இலவமாக வழங்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால் கட்டணம் வசூலிக்கும். 

தற்போதைய நிலையில் பேங்க் அப் பரோடா மட்டும் பணத்தை வைப்பு செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கும் நேற்று முதல் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. பணத்தை வைப்பு செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா கட்டணங்கள் பட்டியலை உருவாக்கி உள்ளது. சேமிப்பு வங்கி கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

மூன்று முறை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் 150 கட்டணம் செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மூன்று முறை வரை பணத்தை இலவசமாக வைப்பு செய்யலாம். ஆனால் நான்காவது முறையாக கணக்கில் வைப்பு செய்தால், 40 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒன்றிய அரசு பெருமை பீற்றிக் கொண்டு வழங்கிய கணக்கு வைத்திருப்பவர்களும் பணத்தை வைப்பு செய்வதற்கு மட்டுமே கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் பணத்தை மூன்று முறைக்கு மேல் திரும்பப் பெறுவதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 

நடப்பு கணக்கு மற்றும் கடன் (ஓவர் டிராப்ட்) கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வைப்பு செய்யலாம். அதற்கு மேல் அதிக பணம் வைப்பு செய்ய வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். அதாவது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்ய, ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். 

நடப்புக் கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் இருந்து ஒரு மாதத்திற்கு மூன்று முறை பணம் திரும்பப் பெறப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்படாது. நான்காவது முறையாக திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாம்.

ஆக பணத்தை நீங்கள் வீட்டிலேயே வைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகும். வங்கியில் போட்டு எடுத்து கொண்டிருந்தால் பணம் குறைந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் பாஜகவுக்கும் பாஜக ஆதரவுக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டு அவர்களையே தேர்ந்தெடுங்கள். கடைசியாக உங்கள் கோவணத்தையும் அவிழ்த்து ஓட விடுவார்கள். வேலைசெய்துவிட்டு அங்கங்கே கஞ்சித் தொட்டி வைப்பார்கள், வயிற்றை நிரப்பிக் கொண்டு, விலங்குகள் போல சுதந்தரமாக வாழலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.