Show all

இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்! பார்முலா1 கார் பந்தயத்தின் பதின்மூன்றாவது சுற்றிலும்

இத்தாலியில் நடந்த வாய்ப்பாடு1 கார் பந்தயத்தில் நடப்பு வாகையரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியின் இமோலா நகரில் நேற்று நடந்தது. 309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் நடப்பு வாகையரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 32.430 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். 

இந்த பருவத்தில் அவரது 9-வது வெற்றி இதுவாகும். அவரை விட 5.783 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.

13 சுற்று முடிவில் ஹாமில்டன் 282 புள்ளிகளுடன் வாகையர் பட்டத்தை நெருங்கி விட்டார். போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அதே சமயம் அணிகளுக்கான வாகையர் பட்டத்தை மெர்சிடஸ் அணி (479 புள்ளி) தொடர்ந்து 7-வது முறையாக உறுதி செய்திருக்கிறது. அடுத்த சுற்று போட்டி வருகிற 15-ந்தேதி துருக்கியில் நடக்கிறது.

கடந்த பனிரெண்டாது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள போர்டிமாவ் ஓடுதளத்தில் நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு காரில் சீறிப் பாய்ந்தனர். 13 சுற்றிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனே 1 மணி 29 நிமிடம் 56.828 வினாடியில் 306.826 கிலோ மீட்டர் தூர இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்திருந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.