Show all

ஆதரவை விலக்கி! காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாஜக ஆப்பு. அடுத்து முட்டை நகர்த்தி அதிமுகவிற்கு ஆப்பா

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்திட பாஜக காய் நகர்த்தி வருகிறது. 

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 3 ஆண்டுகால கூட்டணி ஆட்சி இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதுவும் நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்தும் அடிப்படைக்கான திட்டமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. 

தமிழகத்தில் செயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு சிறுபான்மை அதிமுகவை உருவாக்கி அதன் ஆட்சிக்கு பாஜக முட்டுக் கொடுத்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் அடுத்து நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்திடும் அடிப்படையில் ஆட்சிக் கலைப்பு நடக்கலாம் என்று நம்பப் படுகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலையிலோ வாக்குப் பதிவு எந்திர வலையிலோ மக்களை வீழ்த்தி ஒட்டு மொத்த இந்தியாவை பாஜக குடையின் கீழ் கொண்டு வர இந்த நாடளுமன்றத் தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தல் என்ற யுக்தி உதவும் என்று ஒரு கணக்கை முன்னெடுக்கிறது பாஜக.

நியமன உறுப்பினர்கள் இருவர் உள்பட 89 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காஷ்மீர் சட்டமன்றத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 இடங்களும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும் கிடைத்திருந்தன.

காஷ்மீரை அழித்த பிறகு ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது பாஜக என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து கேஜ்ரிவால் வெளியிட்ட கீச்சுவில், அழிவை ஏற்படுத்திய பிறகு காஷ்மீரில் இருந்து பாஜக வெளியேறியுள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள், தீவிரவாதிகள் தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்த நிலையில் கேஜ்ரிவால் அதை குறிப்பிட்டு இவ்வாறு கீச்சு செய்திருப்பதாக தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.