Show all

கெஜ்ரிவாலும் கமலும் கூடி என்ன சாதிப்பர்! ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்திலாம்

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திலும், டென்மார்க் 2 வது இடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாவது இடத்திலும், நார்வே நான்காவது இடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் 6 வது இடத்திலும், சுவீடன் 7 இடத்திலும், கனடா 8 வது இடத்திலும், லக்சம்பர்க் 9 வது இடத்திலும், நெதர்லாந்து 10 வது இடத்திலும், உள்ளன.  மொத்தம் 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 81 வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட மேலும் இந்தியா ஓரிடம் பின்தங்கியுள்ளது. 

இது குறித்து டிரான்பாரன்சி இன்டர்நேஷனல் கூறுகையில், ஆசிய பசிபிக் நாடுகளில் பத்திரிக்கைகள், சமூக அமைப்புக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள் அல்லது பாதுகாப்புத் துறையை சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் கூட ஊழல் அதிகம் பரவ காரணமாக அமைகிறது. 

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்தியா போன்ற, ஊழல் குறைவில் பின்தங்கிய இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,706 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.