Show all

அழகான சுகப்பிரசவத்தைக் கூட அறுத்துப் போட்டுக் காசாக்கமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தொடங்கி விட்ட நீட் தேர்வில் தமிழகத்தில் 1.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாற்று மொழி, நீண்ட தூரம் பயணத்தால் 15 ஆயிரம் தமிழக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். 

தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படை எவ்வாறு இருந்தது என்பதை தமிழ்ச் சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் நமக்குப் புலப்படுத்தும்.

கற்றுத்தருகிறவரையும்-கற்றுக்கொள்கிறவரையும்

சம்சுகிருதம்

குரு, சிஷ்யன் என்று சொல்லி

கற்றுத்தருகிறவரை குரு என்று உயர்வாகவும்

கற்றுக்கொள்கிறவரை சிஷ்யன் என்று பணிவாகவும் பொருள் உணர்த்துகிறது.

ஆங்கிலம்

Teacher-Student என்று சொல்லி

Teach  கற்றுத்தருதல்

Study கற்றுக்கொள்ளுதல் என்று

கொடுத்தல், பெறுதல் என்று எதிர்ச்சொல் நிலையாகப் பொருள் உணர்த்துகிறது.

ஆனால் தமிழோ

ஆசிரியர்-மாணாக்கர் என்றுசொல்லி

ஆசூஇரியர்-குற்றம்இல்லாதவர் மாண்புஆக்கர்-மாண்புகளை ஆக்கிக்கொள்கிறவர் என்று கற்றுத்தருகிறவர் குற்றம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்றும், அப்போது

கற்றுக்கொள்கிறவர் மாண்புகளை ஆக்கிக்கொள்ள முடியும் என்றும், எவ்வளவு அழகாக தமிழ் தமது அடிப்படைகளைச் சொற்களில் பொதிந்து இருக்கிறது. இன்றைய தமிழக கல்வி நிருவாக அமைப்புகளின் நிருவாக அமைப்பை சட்டத்தின் மூலம் பிடுங்கி,

மாணவர்களை மாண்புள்ளவர்களாக உருவாக்கி அனுப்ப வேண்டிய ஆசிரிய நிருவாகமாக பொறுப்பெடுத்துள்ள நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம், தான்தோன்றித் தனமாவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக, குளறுபடிகளின் பிறப்பிடமாக, குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக இருந்து உருவாக்குகிற மருத்துவர்களிடம் சமூக பொறுப்புணர்வை எப்படி எதிர் பார்க்க முடியும். அழகான சுகப்பிரசவத்தைக் கூட அறுத்துப் போட்டுக் காசு பார்க்கும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாகத் தானேயிருப்பான். 

தமிழர்களின் குறிஞ்சி நிலக்கடவுள் சேயோன் . சேயோன் என்பது தமிழர்தம் பிள்ளைகளைக் குறிக்கும். தமிழர்கள் தெய்வமாக மதிக்கிற தமிழ்ப் பிள்ளைகளை, பொறுப்பற்று பரிதவிக்க விடும் நீட்டால் தமிழ் மக்களின் மனங்கள் பதைபதைக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,779.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.