Show all

என்காசு என்உழைப்பில் பக்கோடா விற்று சம்பாதித்தால் மோடிக்கு என்ன பெருமை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவருடன் காங்கிரஸ் கட்சி ஆதவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

மோடி அண்மையில் பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார்.

தமிழிசையும், ஏதோ ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தினர் கணக்கிலும் மோடி 5,00,000 போட்டு விட்டது போல கொண்டாடினார்.

இந்திரா காந்தி அவர்கள் வேலை இல்லாத இளைஞர்களுக்கு, முப்பது விழுக்காடு மானியத்துடன் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25,000 கடன் வழங்கினார். அவர் ஏதாவது சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஓர் இளைஞர் பக்கோடா விற்பனையின் மூலம் நாளொன்றுக்கு 200 சம்பாதிப்பதாகப் பெருமைபட்டுக் கொண்டால் பொருள் இருக்கிறது.

ஆட்சிக்கு வந்;ததிலிருந்து மக்களை நள்ளிரவில் நாயாய் அலையவிடுகிற மோடிக்கு என்ன அருகதை இருக்க முடியும்.

இதனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடுவண் அரசின் வரவு-செலவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றனர். மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெங்காய பக்கோடா விற்றார். இதேபோல் முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி மற்றும் போண்டா செய்து விற்றார்.

அடப்பாவி மோடி! தாமரைச் சின்னத்தில் ஒரு அழுத்து அழுத்தியதற்காக மக்கள் உன்னிடம் மாட்டிக் கொண்டு படும் அவதி சொல்லி மாளுமா என்ன!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,691

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.