Show all

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் சாதித்தவை என்ன

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நலிவு, பாஜக அல்லாத மாநில ஆட்சிகளுக்கு நெருக்கடி, ஏழைகளுக்கான பல்வேறுவகை மானிய ஒழிப்பு, எல்லையில்லா வெளிநாட்டுச் சுற்றுப்பயணச் செலவுகள், வெற்று விளம்பரச் செலவுகள்,

என பல பிரச்சனைகளுக்கு மட்டும் காரணமான ஆளும் பாஜக மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்ற நிலையில்- ராகுல்காந்தி தன் கீச்சு பக்கத்தில் மூன்றாவது ஆண்டு விழா கொண்டாட வேண்டுமா பாஜக என கேள்வி கேட்டுள்ளார்.

     பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014 மே 16ஆம் தேதி ஆட்சிக்கு வந்தது. இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு அடைகிறது. இந்தேயம் முழுவதும் மோடி சூறாவளிப் பயணம் மேற்கொண்டு இந்தேயாவில் வேலைவாய்ப்பை பெருக்குவேன், ஊழலற்ற இந்தேயாவை உருவாக்குவேன் என பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்.

     அவருடைய பேச்சை முதியவர்களை விட இளைய சமூகம் அதிகம் நம்பியது. அவர்கள் தான் அதிகளவில் வாக்களித்தனர். அதனால் மோடி பிரதமரானார். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் இந்தேயாவில் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.

     தற்போதும் இன்போசிஸ், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களில் 2 லட்சம் பணியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகள் எந்ததுறையிலும் உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி,

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது மூன்றாவது ஆண்டு கொண்டாட்டமா?

என கேள்வி எழுப்பியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.