Show all

முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை இல்லா விழாக்கொண்டாட்ட முயற்சி! அமிர்தசரஸ் தொடர்வண்டி விபத்துத்துயரம்

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறுபதுக்கும் மேலானோர் தொடர் வண்டிவிபத்தில் பலியான அமிர்தசரஸ் ராவண வதம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளூர் கவுன்சிலரின் மகன் சவ்ரவ் மதன் தொடர் வண்டிவிபத்து நடந்த சில நொடிகளில் தன்னுடைய சொகுசுக்காரில் சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு அவசரம் அவசரமாகச் சென்றது கண்காணிப்பு படக்காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இவர்தான் நிகழ்ச்சியின் போது '500 தொடர்வண்டிகள் கடந்து போனாலும் தொடர் வண்டிபாதையில் நிற்கும் 5000 பேர் கலைய மாட்டார்கள் என்று பேசியதும் அம்பலமானது. இந்நிலையில் இவர் விபத்துப் பகுதியிலிருந்து நழுவி, சொகுசு காரில் தப்பிச் சென்றது தற்போது காவல் துறை வசம் இருப்பதால், காவல் துறையினர் மதன் மிது, தந்தை விஜய் மதன் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொடூர சம்பவம் நடந்து பெரும் துயரம் ஏற்பட்ட நிலையில் தசரா ராவண வதம் நிகழ்ச்சியை எந்த ஒரு அனுமதியும் பெறாமல் நடத்திய தந்தையும் மகனும் துயரச்சம்பவத்துக்குப் பிறகு 48 மணி நேரம் மாயமானதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு அமிர்தசரஸில் போராட்டம் வெடித்தது. இவர்கள் மாயமானதால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இவர்கள் வீடுகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

பஞ்சாப் காவல் துறை இந்தத் துயரச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் அதில் எந்த ஒரு நபரையும் பொறுப்பாக்கவில்லை. நேற்று காலை ஆர்பாட்டக்காரர்கள் ஜோதா பதக்கில் காவல்துறையினருடன் மோதினர். இன்னும் யார் மீதும் வழக்குப் பதிவு இல்லை என்பதே ஆர்பாட்டத்துக்குக் காரணமாக உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.