Show all

நடுவண் அரசுக்கு, தமிழர்களோடு இருக்கிற ஒற்றுமை தன்மையின் அழகியலை புலப்படுத்தியருக்கிறார்கள்! சர்தார் வல்லபாய் படேல் சிலை மூலம்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று திறக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஒற்றுமை சிலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒற்றுமை சிலை என்பதை கல்வெட்டில் தமிழிலும் பொறித்து வைக்கக் கருதி, வடஇந்தியர்களுக்கு தமிழர்களோடு இருக்கிற ஒற்றுமை தன்மையை மிக அழகாக வெளிப் படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டில் தமிழில், ஒற்றுமை சிலை என்பதை 'ஸ்டேட்டுகே ஒப்பி யூனிட்டி' என்று தமிழில் கெடுத்து வைத்துதிருக்கிறார்கள். 

கூகுள் மொழிபெயர்ப்பில்  statue of Unity என்று தட்டச்சு செய்தால் ஒற்றுமை சிலை என்று அழகாக தமிழ் வெளிப் படுகிறது. ஒரு உலகளாவிய வணிக நிறுனவத்திற்கு இருக்கிற பொறுப்பு, ஒலகத்திலேயே பெரிய சிலையை நிறுவும் நடுவண் அரசுக்கு இல்லையா? நடுவண் அரசு தமிழின் மீதும் தமிழர்கள் மீதும் கொண்டிருக்கிற அக்கறை இந்த இலட்சனத்தில் வைத்துக் கொண்டு ஒற்றுமை சிலை தேவைதானா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,957.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.