Show all

எளிமைப்பாட்டிற்கான கருவிகளே எமனாகக் கூடாது! மாயமான ஏ.என் 32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்த சோகம்.

கத்தியை எடுத்தவன் கத்தியிலேயே சாவான் என்பது பழமொழி. கருவியை எடுத்தவன் கருவியாலேயே சாகவேண்டும் என்பது என்ன புதுமொழியா? மாயமான ஏ.என் 32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்த சோகத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகளின் கவனக் குறைவு பெருங்காரணியாக இருக்க முடியும்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அருணாச்சல பிரதேசத்தில், மாயமான ஏ.என் 32 ரக விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக 10 நாட்களுக்கு பின்னர் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மற்றும் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இந்திய விமான படைக்குச் சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் புறப்பட்ட 33 நிமிடங்களில் அந்த விமானம் அடர்ந்த வனப்பகுதிக்குள் பறந்த போது மாயமானது. 

பத்து நாள் தேடலுக்குப் பின் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டது. விமானத்தின் சிதறிய பாகங்களுடன் மனித சடலங்களும் இருப்பதைக் கண்ட அவர்கள், ஏ.என். 32-ல் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என அறிவித்தனர். தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் 13 பேரின் உடல்களும், விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 13 பேரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும் இந்திய விமானப் படை கூறியுள்ளது.
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.