Show all

மோடி வெளிநாட்டு பயணத்திற்கு, இந்திய அரசின் மொத்த செலவு ரூ.275கோடி.

பிரதமர் நரேந்திர மோடி 2014- சூன் முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் வரையில் 43 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். அதுமுதல் பிரதமராக மோடி, அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.

     இந்நிலையில் கடந்த 2014-16-ம் ஆணடுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்கள், செலவினங்களைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் கடந்த 2014-ம் ஆண்டு சூன் மாதம் 15-ம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை பூட்டானில் துவக்கி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ஜப்பான் நாடு வரை 27 முறை வெளிநாடு பயணம் என 43 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

     இதில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப். 9 ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சென்ற வகையில், அதிகபட்சமாக ரூ. 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றும், கடந்த 2016 செப்டம்பர் மாதம் லாவோஸ் நாடு சென்ற வரையில் 3 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண மொத்த செலவு ரூ. 275 கோடி. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

     அதே ஆண்டு நவம்பரில் ஜப்பான் சென்ற செலவு விவரம் வெளியிடப்படவில்லை. காரணம் செல்லாத நோட்டு அறிவிப்பு என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் தனது வெளிநாட்டு பயணத்திற்கு போயிங் 747, மற்றும் ஏர் இந்தியாவின் போயிங் 777, இந்திய விமானப்படையின் பி.பி.ஜெ., ஆகிய விமானங்களை பயன்படுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.