Show all

பணமதிப்பு நீக்கம் தொடர்பான விவரங்களை கூறமுடியாதாம்

பணமதிப்பு நீக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்காக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

     கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என நடுவண் அரசு அறிவித்தது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதற்கான செயல்பாடுகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போடப்பட்டது.

     மேலும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது நடைபெற்ற சந்திப்புகளின் குறிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் நிதியமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக சந்திப்புகளின் குறிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     ஆனால் ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட மறுத்துள்ளது. மேலும் இந்த விவரங்களை வெளியிட்டால் நாட்டின் நிதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பொருளாதார நலனுக்கு தீங்காக அமையும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.

     அப்படியா? நாட்டிற்குத் தீங்கான நடவடிக்கையை ஆட்சியாளர்கள் தான்தோன்றி தனமாக மேற்கொண்ட தகவலை மக்கள் எப்படி தெரிந்து கொள்வது?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.