Show all

கற்பழிப்பு குற்றவாளிகளைப் பாஜக அரசாங்கமே பாதுகாக்கிறது என்பதுதான் பிரச்சினையே: பிருந்தாகரத்

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பனிரெண்டு அகவைக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை முந்தாநாள் ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு குடிஅரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பிருந்தா கரத், இந்த அவசர சட்டம் குறித்து கூறியதாவது:

மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நமது சட்ட புத்தகங்களில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. தூக்கு தண்டனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொள்கை அளவில் எதிர்க்கிறது. இப்போதுள்ள பிரச்சினை, கற்பழிப்பு குற்றவாளிகளைப் பாஜக அரசாங்கமே பாதுகாக்கிறது என்பதுதான் பிரச்சினையே அன்றி ஒருபோதும் தண்டனை பற்றியது அல்ல. பாஜகவின் இந்த மரணதண்டனை சட்டம் திசை திருப்பலேயன்றி நாம் எதிர்பார்க்கிற தீர்வு அல்ல.

பாரதீய ஜனதா கட்சியினர் பசு பாதுகாவலர்கள் என்பது நமக்கு தெரியும். இப்போது அவர்கள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்களால் மக்கள் அதிர்ச்சியும், மிகுந்த கவலையும் அடைந்து உள்ளனர். நடுவண் அரசில் உள்ள பாரதீய ஜனதா அரசின் மீது அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இந்த அவசர சட்டத்தால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று நான் கருதவில்லை. இவ்வாறு பிருந்தா கரத் கூறினார். 

தமிழர் உலகுக்கு வழங்கிய கொடையான திருமணம், அதையொட்டிய குடும்பக் கட்டமைப்பு முறையைதாம் ஒட்டு மொத்த இந்தியா பின்பற்றி வருகிறது. ஆணாதிக்க கூட்டமாக நாடோடி வாழ்க்கை நடத்தும் பழைய ஆரியக் கோட்பாடுகளே பாஜகவின் கொள்கை. பசுபாதுகாப்பு, ஆணாதிக்கம், வர்ணாஸ்ரம தர்மம், சங்கப்பரிவார் என்று வக்கிர ஆண்களையொட்டிய (பாஜக கட்டுமானம் செய்து வரும்) சமுதாய அமைப்பில் பெண்கள் வெறுமனே போகப் பொருள். சிறுமிகளாய் இருந்தாலும் அந்த பட்டியலுக்கே வருகிறார்கள். 

ஆக இன்றைய பிரச்சைனைகளுக்கு பாஜகவின் பழைய நடோடி ஆரியக் கோட்பாடுகளின் மீட்பு காரணமேயன்றி தண்டனை, தண்டனை வழங்கும் நிருவாக முறை காரணமல்ல.

இந்தியாவை ஆண்ட ஒரேயொரு மக்களாட்சி மாண்பைப் போற்றும் இந்தியத் தலைமை அமைச்சர், விபி.சிங் போன்றவராயிருப்பார் மோடி என்ற தப்புக் கணக்கில், நாடோடி ஓணானை பிடித்து வேட்டியில் விட்டுக் கொண்டு குத்துதே குடையுதே என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் இந்திய மக்கள். மோடி எப்படிப் பட்டவராய் இருக்கிறார் என்பதற்கு, இந்திய வரலாறு காணாத அவரின் நடோடித் தனமே சிறந்த சான்று. இப்போது கூட அவர் சீனப் பயணத்திற்குதாம் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஒரு கருத்துக் கணிப்பில், எண்பது விழுக்காடு பேர்கள் மேடி இவ்வளவு கேவலமான ஆட்சி நடத்துவார் என்று கனவில் கூட கருதியிருக்க வில்லையென்றும், இருபது விழுக்காடு பேர்கள் தங்களுக்கு முன்பே தெரியும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதிலிருந்து, மோடியை இந்திய மக்கள் நம்பி ஏமாந்து விட்டார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,766.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.