Show all

ஐதராபாத்திற்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 20-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் மற்றும் டூ பிளஸிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர். அம்பதி ராயுடு (79), சுரேஷ் ரெய்னா (54) மற்றும் டோனி (25) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. சுரேஷ் ரெய்னா மற்றும் டோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ் குமார் மற்றும் ராஷித் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதைத்தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வில்லியம்சன் 84 ரன் மற்றும் பதான் 45 ரன் அடித்து சிறப்பாக விளையாடினர். எனினும் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் சாகர் 3 விக்கெட்டுகளையும், தாகுர், ஷர்மா மற்றும் பிராவோ தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 CSK 5 4 1 +0.742 8
2 KXIP 5 4 1 +0.446 8
3 KKR 6 3 3 +0.572 6
4 SRH 5 3 2 +0.301 6
5 RCB 5 2 3 -0.486 4
6 RR 5 2 3 -1.043 4
7 MI 4 1 3 +0.445 2
8 DD 5 1 4 -1.324 2

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.