Show all

ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்துப் போராட திரண்ட மக்கள்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுவை கன்னியக்கோவில் பகுதியில் குடியிருப்பு மத்தியில் குப்பைகள் கொட்டி தேக்கி வைக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மேலும் இதுபோன்று உச்சிமேடு ஏரிக்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் பாண்டிச்சேரி ஆளுநர் கிரண்பேடி-

அந்த இடங்களை ஆய்வு செய்வதற்காக இன்று காலை ராஜ்நிவாசில் இருந்து புறப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் பாகூர் பகுதியில் பார்வையிட ஆளுநர் கிரண்பேடி வருவதாக தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாகூர் மாதா கோவில் அருகே ஒன்று திரண்டு இருந்தனர்.

இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அவர்கள் ஒன்று திரண்டு இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் ஆளுநர் கிரண்பேடியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் ஆளுநர் கிரண் பேடி பாகூர் பகுதிக்கு செல்லாமல் தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு ராஜ்நிவாஸ் திரும்பினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,599

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.