Show all

தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்ற வேண்டுமாம்! உ.பி. பாஜக சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியமற்ற பேச்சு

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை பெரியகோயில் ஆயிரத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருச்சி கல்லணை கட்டப் பட்ட ஆண்டை கரிகாலச் சோழன் கல்லணை கட்டிய காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா மூலம் அறியலாம். 

'தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூற்றில் மிக்ககரி காலவேந் தனுந்தான் - பக்கம் அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான் மலைக்கும் புயத்தானும் வந்து'

அதாவது தமிழ் ஆண்டு 3090ல் கரிகால்சோழன் கரையெடுத்ததாகக் குறிப்பிடுகிறது. இன்;றைக்கு மிகச் சரியாக இரண்டாயிரதது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது. 

இவை நம்மவர்களால் நமக்காக கட்டப் பட்டவைகள். முல்லை பெரியாறு அணைக் கட்டை பென்னிகுக் என்;ற ஆங்கிலேயர் கட்டினார். அவைகளோடு இதையும் தமிழர்கள் சமமாகவே போற்றிக் கொள்கிறோம்.

முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் என்று வரலாறு தெரிவிக்கிறது. 

ஆனால் தாஜ்மஹால் என்பது தேஜாமஹாலயா என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சையும் உண்டு. இதை இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். முன்பு தேஜாமஹாலயா என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார். 

ஜெய்ப்பூர் அரசன் ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான பாத்ஷாநாமாவில், ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

வெறுமனே 364 ஆண்டுகளுக்கு முன்னம் கட்டப் பட்ட தாஜ்மகாலை அதன் உண்மை வரலாற்றோடு போற்றிக் கொள்ள வக்கில்லாதவர்களாக, கண்ணியமில்லாமல், பொய்யுரைகள் புனைவதோடு மட்டுமல்லாமல் அதன் பெயரை 'ராம் மஹால்' என மாற்ற வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தின் பைரியா சட்டப்பேரவைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங்; நேற்று லக்னோ வில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும். அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அந்த வகையில், தாஜ்மஹாலின் பெயரை 'ராம் மஹால்' அல்லது 'சிவாஜி மஹால்' என்று மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சுரேந்தர் சிங்கின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள் ளது சற்று ஆறுதல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,816.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.