Show all

இருநாட்டு தலைவர்களை மகிழ்விப்பதாயும் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ப்பதாயும் அமைந்த விருந்தோம்பல்

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் இன்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு வரலாற்று தலையாயத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை தொடங்கியது. 

முதலில் சுமார் 40 நிமிடங்கள் தலைவர்கள் மட்டத்திலும், பிறகு விரிவாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். சிங்கப்பூர் அரசுதான் இந்த செலவீனங்களை பார்த்துக்கொள்கிறது. இந்த சந்திப்பால், சிங்கப்பூர் அரசுக்கு, சுமார் ரூ.101 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு, சுவை நிறைந்ததும் ஆடம்பரமானதுமாக, ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு ட்ரம்ப்-கிம்ப் மற்றும் அதிகாரிகளுக்கு பரிமாறப்பட்டது. 

மதிய உணவு பட்டியலில், தொடக்கமாக பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்ல், அதனுடன் அவகடோ சலாட். பச்சை மாங்காய் கெரபு அதனுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ். இது தவிர ஒரிசான் எனப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற உணவுவகை ஒன்றும் பரிமாறப்பட்டது. வெள்ளரிக்காயுடன், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுவது இது. 

தொடர்ந்து பீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, அவிக்கப்பட்ட பிரக்கோலியுடன் உருளைக்கிழங்கு டாபினாய்ஸ், ரெட் வொயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய யங்கோலி ப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், சிலவகை மீன் மற்றும் காய்கறிகள். இனிப்பு வகைகள். 

சாப்பாட்டுக்கு பிந்தைய டார்க் சாக்லேட் டார்ட்லெட் கனாசே, வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் மற்றும் டிராபிஜின்னே. என்று சிங்கப்பூர் விருந்தோம்பல் இருநாட்டு தலைவர்களை மகிழ்விப்பதாயும் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ப்பதாயும் அமைந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,816. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.