Show all

நேற்று திமுக ஆட்சிக்கு இறுதியானது மின்வெட்டு! நாளை பாஜக ஆட்சிக்கு இறுதியாகப் போவது பெட்ரோல்விலையேற்றம்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கடைசியாக ஆட்சி புரிந்த திமுக மின்வெட்டு காரணமாகத்தான் தனது ஆட்சியை இழந்தது. தமிழகம் முழுவதும் எப்போதும் இருளாகவேயிருக்கும். மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு தமிழகம் முழுவதும் இதே பேச்சாக இருக்கும்.

செயலலிதா அவர்கள் ஆட்சியேற்ற பிறகுதான் தமிழகத்திற்கு மின்சாரம் கிடைத்தது. திமுகவால் ஏன் மின்சாரத்தை ஒழுங்கு படுத்த முடியாமல்; போனது? செயலலிதா அவர்களால் அது எப்படி சாத்தியமானது என்பது இன்னும், ராஜிவ் கொலை வழக்கு போல மர்மமாகவே யிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு இறுதியாகிப் போன மின்சாரம் போல பாஜகவிற்கு இறுதியாக தலையெடுத்திருப்பது பெட்ரோல் விலையேற்றம். திமுகவால் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க முடியாதது போலவே பாஜகவால் பெட்ரோல் பிரச்சனையைத் தீர்க்கவே முடியவே முடியாது போல இருக்கிறது.

பாஜக ஆட்சியிழப்பில்தாம் பெட்ரோல் பிரச்சனையில் தீர்வு இருக்கிறது என்றால் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு எந்தத் தடையும் இல்லை. 1.மோசமான ஆட்சி 2.பெட்ரோல் விலையேற்றம் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதால், ஒரு கல்லில் அந்த இரண்டு மாங்காய் கிடைக்கிறது என்றால் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதாமே.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனமே அன்றாடம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்த ஒராண்டில், அது முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாயாகவும் டீசலின் விலை 57 ரூபாயாகவும் இருந்தது. 

நேற்று நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.