Show all

தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை மதம்; அதற்கு அரசின் ஊக்குவிப்பு தேவையா என்ன! தேவையென்கிறது ஆதித்தியாநாத் அரசு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  உத்தராகண்ட் மாநிலம் ஹரித் துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் வரை 130 கி.மீ. தூரம் ஆண்டுதோறும் சிவபக்தர்கள் காவடி ஏந்தி யாத்திரை செல்வது வழக்கம். காசியாபாத்தில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூசைகள் செய்ய, கங்கை நீரை சுமந்தபடி பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

இந்நிலையில், யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களை வர வேற்கும் விதத்தில் உலங்கு வானூர்தியில் இருந்து அவர்கள் மீது ரோஜா மலர் தூவ உத்தரபிரதேச மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் உத்தரவின்படி 'ஏர் சார்ட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திடம் இருந்து உலங்கு வானூர்தி; ஒன்றை வாடகைக்கு எடுத்து பக்தர்கள் மீது மலர் தூவியுள்ளனர்.

மீரட் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்கள் வழியாக வரும் பக்தர்கள் மீது கடந்த செவ்வாய்க் கிழமை முதல் நேற்று வரை மலர் தூவப்பட்டுள்ளது. இதற்காக உலங்கு வானூர்தி வாடகை உட்பட ரூ.14.31 லட்சத்தை உ.பி. அரசு செலவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.