Show all

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

     இந்தேயாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இதற்கு இந்தேயா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் ஈரானில் வசித்ததாகவும், அங்கிருந்து கடத்தி செல்லப்பட்டதாகவும் நடுவண் அரசு கூறியுள்ளது. ஜாதவை மீட்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பாராளுமன்றத்தில் நடுவண் அரசு உறுதியளித்துள்ளது. ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி கேட்டும், அவரது தீர்ப்பின் நகலை கேட்டும் இந்தேயா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இது குறித்து பாகிஸ்தான் எந்த பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.

இதனால், அதிருப்தியடைந்துள்ள இந்தேயா, பாகிஸ்தானியர்களுக்கு நுழைவுஅனுமதி வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக நுழைவுஅனுமதி கேட்டவர்களின் விண்ணப்பமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

     இதனிடையே, ஜாதவ் தொடர்பான ஆதாரங்களை ஐ.நா.மன்றம் மற்றும் வெளிநாட்டு தூதர்களிடம் பாகிஸ்தான் வழங்க உள்ளதாக அந்நாட்டு; ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலுசிஸ்தான் மற்றும் கராச்சியில் அவர் உளவு பார்த்தது தொடர்பான ஆதாரங்கள், நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் ஆகியன அளிக்க உள்ளதாக அந்தசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     தமிழக மீனவர்களுக்காகவும் இது போன்ற முயற்சியில் இந்தேயா ஈடுபடுவதற்கு ஏதாவது தடை இருக்கிறதா என்ன!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.