Show all

மோடி அரசு பாக்கிஸ்தானுடன் போர் தொடுக்கும்: திக்விஜய் கணிப்பு

 

     பாராளுமன்றத் தேர்தலில் வெல்வதற்காக பா.ஜ.க அரசு பாகிஸ்தானுடன் போர் தொடுக்கும் என காங்கிரசு மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

     ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கவில்லை.

உற்பத்தி துறையில் முன்னேற்றம் இல்லவே இல்லை. சிறு தொழில்கள் மூடப்படுகின்றன. மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. பணியில் உள்ளவர்களும் அதனை இழக்கின்றனர். இதனால் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

     இதனால், தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க,வுக்கு வேறு வாய்ப்பு கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில், மோடி அரசு பாகிஸ்தானுடன் போரை நடத்தும். 2019 தேர்தலில் வெற்றி பெற இது போன்ற சூழ்நிலை உருவாக்கப்படும். பாஜகவிற்கு எதிர்கட்சிகளை தேசவிரோத சக்திகளாக சித்தரிப்பதும் பாகிஸ்தான் எதிர்ப்பு என்பன தவிர வேறு உபாயம் எதுவும் இல்லை.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.