Show all

ஆதார் எண் கட்டாயத்தை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற நடுவண் அரசின் உத்தரவை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, உச்ச அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்துள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற ஆதார் எண் இணைப்பை நடுவண் அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை எதிர்த்து உச்சஅறங்கூற்று மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆதார் எண் இணைப்பிற்கு 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (31.03.2018) வரை உச்ச அறங்கூற்று மன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , தன்னுடைய செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற நடுவண் அரசின் உத்தரவை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, உச்ச அறங்கூற்று மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, பிற வழக்குகளுடன் சேர்ந்து 13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (30.10.2017) விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.