Show all

தமிழ்நாட்டு திட்டத்தை நகல் எடுப்பதோடு தொடர்ந்து தமிழகத்திற்கு ஆப்பு அடிக்க நடுவண் அரசின் வரவு-செலவில் திட்டமாம்

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு எல்லா விசயத்திலும் ஒரு படி மேல் என்றால் நாம் மறுக்க முடியாது. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் திமுக- அதிமுக கட்சிகள் செயலலிதா அவர்கள் மரணத்திற்கு முன்பு வரை அறிவித்த திட்டங்களும், அவற்றை செயல்படுத்திய முறையும் தான்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் பாஜகவின் ஆலோசனைகள். அத்துமீறல்களால் தமிழ்நாட்டை ஒரு நிழல் கப்பியிருக்கிறது. விரைவில் மீண்டு விடும். ஆனாலும் என்றைக்கும் இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி தமிழகமே தற்போது நடுவண் அரசே தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நகலெடுத்து இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடுவண் அரசு நகல் எடுத்து மிகப்பெரிய திட்டமாக அறிவிக்க உள்ளது. NATHEALTH அமைப்பு நடுவண் அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு கட்டாயம் வழங்க வேண்டும், மேலும் சுகாதாரத் துறையை முக்கியமான துறையாகக் கொண்டு இயங்க வேண்டும் என இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான NATHEALTH வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்காகத் தனிப்பட்ட முறையில் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தக் கோரிக்கையை நடுவண் அரசு மிக முதன்மையானதாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதே மக்களுக்குப் பலன் அளிக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக அமைந்துள்ளது.

தமிழகம் தவிர, இந்தியாவில், இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மீதமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கடன் உடன் பட்டே பணத்தைச் செலவு செய்கின்றனர்.

இதனை நடுவண் அரசுக்கு, தமிழகத்தை முன் மாதிரியாக சுட்டிக்காட்டி உடனடியாகக் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனNATHEALTH அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை உடனடியாக அரசு கையில் எடுக்கும் பட்சத்தில் மக்களுக்கு நன்மை செய்ய மோடி அரசுக்கு நல்ல வாய்ப்பாக அமைய முடியும். வரவு-செலவு அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை நடுவண் அரசிடம் வைக்கப்பட்டு உள்ளது.

மோடி தலைமையிலான அரசு எதிர் வரவிருக்கும் பொதுத்தேர்தலின் வெற்றியை மையமாக வைத்து, நடப்பு வரவு-செலவு அறிக்கையைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ காப்பீட்டை மையமாக வைத்து மிகப்பெரிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. நிதி ஒதுக்கீடு வரவு-செலவு தயாரிப்புக் குழுவில் இருந்து கிடைத்த தகவல்கள் படி, நடுவண் அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு வழங்க சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு நடப்பு வரவு-செலவு பதிகையின் போது அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.

இத்தகைய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் மொத்த செலவில் 40 விழுக்காட்டை மாநில அரசும், 60 விழுக்காட்டுத் தொகையை நடுவண் அரசும் அளிக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வகையில், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகஅரசு பணத்திலும், இந்தியா முழுக்க மாநில அரசுகளின் பணத்திலும் குதிரை சவாரி செய்ய மோடிக்கு ஓர் புதிய வாய்ப்பு கிடைத்து விட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,683

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.