Show all

பணம்மதிப்பிழக்கச் செய்த நாளை கருப்பு நாளாக அறிவித்து திமுக இந்திய புரட்சி

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த ஆண்டு 23,ஐப்பசி (8,நவம்பர்) அன்று தலைமை அமைச்சர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, நள்ளிரவு தொடக்கமாக, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் உழைப்பின் ஆதாயமான பணத்தின் மதிப்பை அரசு இழக்கச் செய்ததால், நடுத்தர மற்றும் எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நொண்டியடிக்கும் வேகத்தில் ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைப் பெற பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நாள்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது. அப்போது உடல்நலமில்லாதவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. இது பொதுமக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வங்கிகள், ஏடிஎம் வாசல்கள் மக்கள் கூட்டங்களாகவே பல மாதங்களுக்கு தென்பட்டன. புரட்சி என்று நடுவண் அரசால் வர்ணிக்கப்படும் பணமதிப்பிழப்பு விவகாரம், எளிய மக்களின் கைக்காசை பிடிங்கிக் கொண்டு, பட்டினியில் வருந்தச் செய்தது.

பல்வேறு பொருளாதார நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், நடுவண் அரசு பிடிவாதமாக அமல்படுத்தியது.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், எதிர் வரப்;;போகும் இருட்டு நாளை கருப்பு நாளாக அனுசரிப்பதாக திமுக இந்திய புரட்சியை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.