Show all

காங்கிரஸ், பாஜகவை வெச்சு செய்து கொண்டிருக்கிறது. சிரிப்புக்கு சரக்கு-சேவை வரி போடவில்லையாம்

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிரிப்பதற்கு சரக்கு-சேவைவரி இல்லாததால் தொடர்ந்து சிரித்துக் கொண்டேதான் இருப்பேன் என்று மோடியின் இராமாயண கால சிரிப்புக்கு விளக்கம் அளித்துள்ளார் ரேணுகா சவுத்ரி.

நடுவண் அரசின் வரவு-செலவு கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று குடிஅரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மோடி மக்களவையில் நீண்ட நேரம் காங்கிரஸை வம்படித்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, பிரண்ட்ஸ் படத்து விஜய் போல அடக்கமாட்டாமல் சிரித்தார். அப்போது மாநிலங்களவை பேரவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு குறுக்கிட்டார். ரேணுகா சவுத்ரி ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். எனவே தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். நாடே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் கேலிப்பொருளாகிவிடுவோம் என்று கடிந்து கொண்டார்.

அப்போது மோடி கூறுகையில் பேரவைத் தலைவரே! அவரை தடுக்காதீர்கள். நன்றாக சிரிக்கட்டும். ரேணுகாவை எதுவும் சொல்லாதீர்கள். ராமாயணத்துக்கு பிறகு நீண்ட சிரிப்பை நாம் கேட்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என்றார்.

மோடியின் நகைச்சுவையை பாஜக உறுப்பினர்கள் மேடையை தட்டி வரவேற்றனர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறுகையில் சிரிப்பதற்கு சரக்கு-சேவைவரி கிடையாது, அதனால் நான் தொடர்ந்து சிரித்து கொண்டேதான் இருப்பேன். பெண்ணை இழிவுப்படுத்தும் விதமான சொல்லை மோடி குறிப்பிட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார்.

மோடியின் ராமாயண கருத்தாடல்;; குறித்து காங்கிரஸ் தனது கீச்சுவில் கூறுகையில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்ரியை மோடி இழிவுப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவையில் பாரபட்சம் இல்லாமல் பேரவைத் தலைவர் நடந்து கொள்ள வேண்டும். சக உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,692

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.