Show all

முடங்கியது, இடைநிலைக் கல்வி வாரிய இணைய தளம்! நீட்தேர்வை தமிழர்கள் முடக்குவது எப்போது

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயல்பாடு இல்லா தமிழக அரசில், தமிழக மக்கள் போராட்டத்திற்கு, பயனில்லாமல் நடுவண் அரசின் நீட் அடாவடி மருத்துவ நுழைவுத்தேர்வு வரும் 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120ல் (06.05.2018) நடத்தப்பட உள்ளதாக நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் என்ற அறிவிப்பால் நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரிய இயங்கலை பக்கமே முடங்கியது.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்கங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச அறங்கூற்று மன்ற உத்தரவால் கடந்த ஆண்டு தடையின்றி நடந்தது.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுத மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் மோடி அரசின் புண்ணியத்தில், தனியார் கார்ப்பரேட் பயிற்சி நிலையங்கள் மூலம் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இன்று முதலே அதற்கான விண்ணப்பங்கள் இயங்கலை மூலம் விநியோகிக்கப்படுகிறது. இயங்கலை மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து இயங்கலை மூலமே விண்ணப்பமும் செய்யலாம். 25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119

வரை (09.03.2018) விண்ணப்பங்களை இயங்கலையில் அளிக்கலாம். அடுத்த நாள் விண்ணப்ப கட்டணம் கட்ட கடைசி ஆகும்.

விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ரூ.1400 தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள் ரூ.750 ஆகும்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்த நொடியில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இடைநிலைக் கல்வி வாரிய இணைய தளம் முடங்கியது.

தமிழர்கள் நீட்தேர்வை முடக்குவது எப்போது என்று தான் தெரியவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,692

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.