Show all

பாஜகவின் குட்டு உடைந்தது! வந்ததடி மோடியின் எண்ணிம தில்லாலங்கடிக்கு ஆப்பு

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு மூலமாக வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் பாரதிய ஜனதா கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலமான வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் மட்டும் பாஜக அமோகமான வெற்றியை பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாஜகவினர் முறைகேடாக பயன்படுத்தி தேர்தலில் வென்று வருகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றவர்கள் பழைய வாக்குச் சீட்டு முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மின்னணு வாக்குப் பதிவுதான் வேண்டும் என ஒற்றைக்காலில் பாஜக அடம்பிடித்து வருகிறது. பாஜகவின் இந்த அடம் பிடித்தல் குறித்து தொடர்ந்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது.

தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெறுவதை உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திவிட்டன. உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு மூலம் நடைபெற்ற இடங்களில் பாஜக 87விழுக்காடு வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆனால் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களிலோ பாஜக படுதோல்வியையும் பெரும்பாலான இடங்களில் சுயேட்சைகளும் வென்றிருக்கின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் உடனடியாக குஜராத் தேர்தலுக்கு தடைகோரிட ஆலோசித்து வருகின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மாதிரியாக இருக்கப் போகிற குஜராத் தேர்தல் பழைய வாக்குச் சீட்டு முறையில் நடத்;;;;தப் பட்டால் மட்டுமே மக்களை நள்ளிரவுகளில் நடுத்தெருக்களில் நாயாய் அலைய விடும் மோடியை இந்தியாவை விட்டு விரட்ட முடியும்.

இல்லாவிட்டால் வாழ்நாள் முழுக்க இந்தியா மோடிக்கு அடிமையாக இருக்கப் போகிற தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,625

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.