Show all

துக்கத்தில் துவண்டிருக்கும் அதிமுக பன்னீர் அணி

இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அணிகள் இணைப்பு நடந்தேறிவிட்டாலும் பன்னீர் தரப்பு கடுமையாக அதிருப்தியில் உள்ளது. பன்னீருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும் அதிகாரமற்றவராக மாற்றப்பட்டார்

அதுவும் ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் மேடையில் இருக்கை போடாமல் அமைச்சர்களோடு அமைச்சர்களாக தம்மை உட்கார வைத்தது பன்னீர் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதையடுத்தே டெல்லி சென்று முறையிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தாராம் பன்னீர். டெல்லி செல்வதில் முதலில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் முயற்சித்து தலைமைஅசை;சர் மோடியை சந்தித்துவிட்டார் பன்னீர். ஆனால் எடப்பாடி மீதான அதிருப்தியில்தான் பன்;னீர், மோடியைச் சந்தித்தார் என்பதை டெல்லி செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அம்பலப்படுத்தினர்.

பன்னீருக்கு மட்டுமல்ல அவரது அணியினருக்கும் எந்த தலையாயத்துவமும் இணைப்பின் மூலம் கிடைக்கவில்லை. பெயரளவுக்கு இரு அணிகளும் இணைந்திருக்கின்றன அவ்வளவுதான்.

இதனால் பன்னீர் அணியின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் பன்னீர் தரப்பு இன்னொரு தர்ம யுத்தத்தை தொடங்கலாம்; மீண்டும் சமாதி தியானம், பேட்டி படலங்கள் அரங்கேறும் என்றே கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.