Show all

கிரிவலத்தின் போது அப்படியே 3000அடி பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்த இளைஞர்

இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவக் கோயிலாகும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்களின் நேர்த்தி கடன் மிகவும் சிறப்பம்சம் பெற்றதாகும்.

நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர். நேற்று காலையில் கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த இளைஞரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். எனினும் அந்த இளைஞர் குறித்து அவரது குடும்பத்தார் யாரும் புகார் அளிக்காததால் அவரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த இளைஞர் தவறிவிழும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இது நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.