Show all

டெல்லியில் தமிழுக்குக் கலைக்கழகம்! வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை (அகாடெமி) உருவாக்கி உள்ளோம் என்கிறது டெல்லி மாநிலஅரசு.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை டெல்லி மாநிலஅரசு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் தலைவராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக தில்லி மாநகராட்சி முன்னாள் தலைவர் என். ராஜா ஆகியோரை நியமித்து டெல்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் டெல்லி கலை, கலாசாரம், மொழித் துறையில் தமிழ் மொழி, அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்க் கலைக்கழகம் (அகாடெமி) அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் தலைவரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை தமிழ்க் கலைக்கழகத்தின் துணைத் தலைவராக டெல்லி அரசு நியமித்துள்ளது. டெல்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து, பணியாற்றி வருகின்றனர். இந்தப் பன்முகத்தன்மையே டெல்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது. டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை உருவாக்கி உள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.