Show all

முதலில் தாஜ்மஹால் தற்போது திப்பு சுல்தான் ஜெயந்தி: தொடர்ந்து சர்ச்சை

சில நாட்களுக்கு முன்பு தான் உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹாலை உத்தரபிரதேசத்திலுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, சுற்றுலா துறை புத்தகத்திலிருந்து தாஜ்மகால் நீக்கியது, அரசு வரவுசெலவுத் திட்டத்தில் தாஜ்மகால் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்காதது, மேலும் சர்தானா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், தாஜ்மகாலை இந்திய வரலாற்றிலிருந்து நீக்க வேண்டு என கூறியதோடு சில தவறான வரலாறுகளையும் கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில் திப்புசுல்தான் பிறந்தநாள் விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நவம்பர் 10-ம் தேதி நடக்க இருக்கும் திப்புசுல்தான் பிறந்ததினம் தொடர்பான விழாவிற்கு என்னை அழைக்க வேண்டாம். மேலும், விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம், திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக, ஆர்எஸ்எஸ், விஹெச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் இந்த விழாவிற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய திப்புசுல்தான் பிறந்ததினமான நவம்பர் 10-ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதை பாஜக வினர் புரிந்து நடந்து கொண்டால் சிறப்பு. அவர்களுக்கு தேவையானவர்கள் வரலாறுகளை மட்டும் பெரியதாக பேசுவதும் மற்றவர்களின் வரலாறுகளை ஒடுக்க நினைப்பதும் மிகவும் தவறான அணுகுமுறை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.