Show all

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த தமிழ்நாடு பாஜக

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல், தண்ணீர் பற்றாக்குறை, கதிராமங்கலம் மீத்தேன் எரிவாயு என இன்னும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் மெர்சல் படத்தில் வந்த GST தொடர்பான வசனங்கள் தான் மிகப்பெரிய பிரச்னை போல தமிழக  பாஜக தலைவர் தமிழிசை அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினார். அதை தொடர்ந்து தமிழக பாஜக பிரமுகர்களான பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் மற்றும் எச். ராஜா என அனைவரும் போர்க்கொடி தூக்கினர். இதுதான் சமயம் என ஒரு சில அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும் ஹெல்த் செக் அப் தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என கூறினார்.

மெர்சல் படத்தில் எந்த காட்சிகளையும் நீக்க வேண்டியது இல்லை என ஏராளமான பிரபலங்களும், பெரும்பாலான மக்களும் கருத்து கூறினார். தமிழ்நாடு அளவில் இருந்த பிரச்னை சிறிது சிறிதாக வளர்ந்து தேசிய அளவில் சென்றது. தேசிய ஊடகங்களும் இது தொடர்பாக விவாதிக்க ஆரம்பித்தது. ஏன் ராகுல் காந்தி கூட மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். மேலும் ட்விட்டரிலும் MersalVsModi  எனும் ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆனது. இது அனைத்திற்கும் காரணம் தேவை இல்லாமல் தமிழக  பாஜக தலைவர் தமிழிசை பிரச்சனையை ஆரம்பித்ததுதான். இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் பாஜக கட்சியை வளர்க்க பார்க்கிறார்களா இல்லை போட்டுத்தள்ள பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

அரசியல்வாதிகள் தேவையில்லாமல் பிரச்சனையை தேடுவதற்கு பதிலாக மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்தால் புண்ணியமாக போகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.