Show all

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை! தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன்

கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததது, நூறு அகவை முதிர்ந்த தமிழ்அறிஞர்களுக்கு மாதம் நான்காயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம், இத்திட்டத்திற்கு திமுக ஆட்சியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு கொடுக்கப்பட்டு வந்த விண்ணப்பங்களில், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நூறு அகவை முதிர்ந்த அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இத்திட்டம் தமிழ்நாடு அரசின் அடுத்த முன்னெடுப்பாக இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

11,தை,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை உருவாக்கிட தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட, பேராசிரியர் சாந்திசிறீ துலிப்புடி பண்டிட்டிடம் ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வழங்கியுள்ளார்.

இதன் மூலம் வரலாற்று சிறப்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை விரைவில் உருவாக உள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முதன்மைப் பணிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதேபோல் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை இராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகையும், மறைந்த ஐந்து தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் உள்ளிட்டோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கடந்த ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை பத்து பேர்களுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்குக் காத்திருக்கும் அடுத்த தமிழ்வளர்ச்சித் திட்டம், 'அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்' ஆகும். 

இது, கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததது, நூறு அகவை முதிர்ந்த தமிழ்அறிஞர்களுக்கு மாதம் நான்காயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம், இத்திட்டத்திற்கு திமுக ஆட்சியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு கொடுக்கப்பட்டு வந்த விண்ணப்பங்களில், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நூறு அகவை முதிர்ந்த அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இத்திட்டம் தமிழ்நாடு அரசின் அடுத்த முன்னெடுப்பாக இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,504.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.