Show all

பெட்ரோலியப் பொருட்களை சரக்குமற்றும் சேவைவரியில் கொண்டுவர வேலைநிறுத்தம்

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்,

27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (13.10.2017)

அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் அன்றாடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (16.06.2017)

முதல் அமலுக்கு வந்தது.

அன்றாட விலை நிர்ணயம் காரணமாக பல்வேறு சிக்கல்களைப் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து வருவதாகவும், விலை ஏற்றம் கடுமையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் மும்பையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சங்கம், பெட்ரோலிய பொருட்களுக்கு

1. அன்றாட விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும்.

2. பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக வீடுகளில் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும்.

3. நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையைக் கடைபிடிக்கும் விதமாக பெட்ரோலியப் பொருட்களை சரக்குமற்றும் சேவைவரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மானித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.