Show all

இப்போதே தீபாவளி வந்து விட்டது. காரணம்: சரக்குசேவைவரி. சொல்வது மோடி

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு கசாப்புக் கடையில் ரொம்ப நாளாகவே- ஆடு, மாடு, வகையறாக்கள்- மீன், நண்டு வகையறாக்கள்- கோழி, காடை, கவுதாரி வகையறாக்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. தீபாவளி வரப்போவதில் அந்தக் கடைக்காரருக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி-

ரொம்ப நாளாகவே விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த- ஆடு, மாடு, வகையறாக்கள்- மீன், நண்டு வகையறாக்கள்- கோழி, காடை, கவுதாரி வகையறாக்களைப் பார்த்து அந்தக் கசாப்புக் கடைக்காரர் மகிழ்ச்சியாகச் சொன்னாராம், ‘உங்களுக்கெல்லாம் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளிஎன்று. இதுகதை.

குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக தலைமை அமைச்சர் மோடி சென்றுள்ளார். தலைமை அமைச்சராக மோடி பதவி ஏற்றப்பின் முதல்முறையாக தான் பிறந்த இடமான வாத் நகருக்கு இன்று செல்ல இருக்கிறார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்தி அங்கிருந்து வாத் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். கோவிலில் வழிபாடு நடத்திய மோடி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து பேசிய மோடி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகத்தால் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, சரக்கு மற்றும் சேவை வரியில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு இப்போதே தீபாவளி வந்து விட்டது. மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் என்றார் .

இந்தியப் பொருளாதாரம் குறித்து மேலும் பேசிய அவர், இந்தியாவில் பெரும் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன . இப்போது இருக்கும் இந்த சிறிய பொருளாதார மந்த நிலை விரைவிலேயே சரி செய்யப்படும்,

என்று கூறினார்.

இந்த இரண்டு நாள் பயணத்தில் மோடி, நிறைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களிடம் உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.