Show all

தாஜ்மஹால் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி: யோகிஆதித்யநாத்

இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபாவளியையொட்டி அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய ஆதித்யநாத், ‘இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் ராமர் பிறந்த இடமான ராமஜென்மபூமிக்கு (அயோத்தி) வந்து செல்கின்றனர். நான் இங்கு ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ‘ராம ராஜ்ஜியம்என்பது மக்களின் வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. ஏழ்மை நிலை நீங்கி, ஏற்றத்தாழ்வுகள் அற்ற நிலையை உருவாக்குவதுதான் ராம ராஜ்ஜியம். அந்த நிலையை உருவாக்குவதுதான் என் நோக்கம்என்று பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதியநாத்திடம் நிருபர்கள் தாஜ்மஹால் குறித்து கேள்வி எழுப்பினர். ‘தாஜ்மஹால் பற்றி சிலரின் விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாஜ்மஹால் சர்வதேச சுற்றுலா ஸ்தலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ‘தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டதுஎன்று பா.ஜ.க-வை சேர்ந்த சட்டமன்றஉறுப்பினர் சங்கீத் சோன் கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் இந்திய தொழிலாளர்களின் உழைப்பில் உருவானது. தாஜ்மஹால் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்என்றார்.

இராமன் ஆட்சி கட்டிலேறமலே 14 ஆண்டுகள் வனவாசம் போனார். வந்ததும் மனைவியைக் குற்றம் சுமத்தி தீக்குளிக்க வைத்தார். வாழ்நாள் முழுக்க இராமருக்கு சொந்த வாழ்க்கையே பிரச்சனையாய் இருந்தது. இராம ராச்சியம். நிலையை உருவாக்குவது என்றால் என்னவாம் என்கின்றனர் இணைய ஆர்வலர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.