Show all

ஆசியக் கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் தனது இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா அணியை 6-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தியா- தென்கொரியா அணிகள் இடையேயான முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் சிங் (15), ஹர்மன்ப்ரீத் சிங் (19), உத்தப்பா (24), குர்ஜந்த் சிங் (22), எஸ்வி.சுனில் (40), சர்தார் சிங் (60) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் இந்தியா  6-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த மலேசியா, தென்கொரியா அணிகளும் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகிறது. இச்சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதன்முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மேலும் இச்சுற்றில் முதல் போட்டியில் டிராவும் இரண்டாவது போட்டியில் வெற்றியும் பெற்றதன் மூலம் வலுவான நிலையில் உள்ளது இந்தியா அணி. வரும் சனிக்கிழமை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.