Show all

கன்னட அமைப்பினர் சிலர், ரஜினியின் உருவ பொம்மையை எரித்து, தமிழக ஆதரவுக் கருத்துக்கு எதிர்ப்பு

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீட்டு தொடர்பான தீர்ப்பை 15 ஆண்டுகளுக்கான இறுதி தீர்ப்பு என்று உச்சஅறங்கூற்று மன்றம் நேற்று பிறப்பித்தது.

அதில், தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி. அளவு தண்ணீரை குறைத்தும், இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கீச்சு பக்கத்தில் உச்சஅறங்கூற்று மன்றத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

காவிரி நீர் பங்கீட்டில் உச்சஅறங்கூற்று மன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் சன்னப்பட்னா மாவட்டத்தில் காவிரி தீர்ப்பு குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததை கண்டித்து, கன்னட அமைப்பினர் சிலர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,701

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.