Show all

முடிவுக்கு வராத உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் போட்டா போட்டியின் தீர்வுக்கு சீதாராம் யெச்சூரி திட்டம்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்களுக் கிடையிலான போட்டா போட்டி இன்னும் முடிவுக்கு வராத நிலையில்,

தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா எதிரணிக்கு ஆதரவு நிலையில், தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை, நாடாளுமன்றத்தில் பதிகை செய்வோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்சஅறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைமை அறங்கூற்றுவர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. ஆகையால் நாங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத் தொடரில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,676

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.