Show all

கிரண் பேடி! போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஹிந்துத்துவாவிற்கு உரம் சேர்க்கும் முயற்சியில் களமிறங்கி, போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிள்ளையார் பிறப்புக்கு கதை, கதிரவமறைப்புக்கு பாம்பு கதை, அறுபது அண்டுகளுக்கு கதை, தமிழர் நடுகல் வழிபாட்டை சிவலிங்கமாக்க கதை, இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகளாலேயே பிழைப்பு நடத்திவரும் கும்பல், இணைத்தையும் விட்டு வைக்காமல், புளுகு மூட்டைகளுக்கு கடை விரித்திருப்பதும், சிலர் அவ்வப்போது சிக்கி வருவதும் நடைமுறையில் தொடர்ந்து நிகழ்வதுதாம்.

இந்த நிலையில்தான், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஹிந்துத்துவாவிற்கு உரம் சேர்க்கும் முயற்சியில் களமிறங்கி, போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது கீச்சுப் பக்கத்தில் நாசா வெளியிட்டதாக, ஒரு கணொளியைப் பதிவிட்டிருந்தார். கதிரவனிலிருந்து இருந்து வெளிப்படும் ஒலி, ஓம் என்று ஒலிப்பதாக அந்தக் காணொளில் முயற்சிக்கப் பட்டிருந்தது. 

உண்மையில், அது சித்தரிக்கப்பட்ட காணொளி ஆகும். சில ஆண்டுகளாகவே அந்தக் காணொளி சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு  வந்த நிலையில், உண்மை நிலைஅறியாமலோ, தெரிந்தே மக்களை ஏமாளியாக்கவோ, கிரண் பேடியும் தற்போது போலிச் செய்திக்கு சிக்கியுள்ளார்.

காவல்துறை அதிகாரியாக இருந்தவர், பல புத்தகங்களை எழுதியவர் என்று பல முகங்களை கொண்ட கிரண் பேடி, குறைந்தபட்சம் ஒரு செய்தியைச் சரிபார்க்காமல் பகிர்வது சரியா? என்று பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கதிரவனிலிருந்து வெளியாகும் வெப்ப அலைகளின் ஒலியை நாசா வெளியிட்டுள்ளது உண்மையே. ஆனால், கிரண் பேடி பகிர்ந்தது சித்தரிக்கப்பட்ட ஒன்று என்று வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு கிரண்பேடியை இணையம் பகடியாடி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,387.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.