Show all

தென்னாப்பிரிக்காவிற்கும் தேவையா ஒரு பெரியார்! பில்லி சூனிய மூடநம்பிக்கைக்குப் பலியான எட்டு சிங்கங்கள்.

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் இருந்த எட்டு சிங்கங்கள்  நஞ்சிட்டுக் கொல்லப்பட்டுள்ளன. பில்லி சூனியத்துக்காக பற்கள், நகங்கள் பிடுங்கப்பட்டு சிங்கங்கள் கொடூர கொலை.

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னாப்பிரிக்காவில் ரஸ்டன்பர்க் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் இருந்த எட்டு சிங்கங்கள் திடீரென்று இறந்து கிடந்தன. அந்தச் சிங்கங்கள் நஞ்சிட்டுக் கொல்லப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. 

கோழி இறைச்சியில் நஞ்சு வைத்து இந்தச் சிங்கங்கள் கொல்லப்பட்டதாகவும், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை செய்வதற்காக இவற்றின் பற்கள் மற்றும் நகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் காப்பகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். 

நஞ்சால் பாதிக்கபட்டிருந்த சிங்கத்திடம் பால் குடித்த இரண்டு குட்டிகளும் பலியானதாகவும், உயிரிழந்த இரண்டு சிங்கங்கள் ஆறு குட்டிகளை பிரசவிக்க இருந்த நிலையில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பற்கள் மற்றும் நகங்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில் சிங்கங்கள் இறந்து கிடந்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகின் எல்லா மண்ணுக்கும் ஒவ்வொரு பெரியார் தேவையாகத்தான் இருப்பார் போலிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,388.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.