Show all

கர்நாடகம், உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாது, என்று தெளிவு படுத்தும் சித்தராமையா

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது,

காவிரி வழக்கில் உச்சஅறங்கூற்றுமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், கருநாடகத்திற்கு அதிக நீர் ஒதுக்கீடு வேண்டும் என்ற தங்கள் வாதத்தை ஒப்புக் கொண்ட வகையில் வரவேற்கத்தக்கது என்றும்,

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்ற கர்நாடகத்தின் வாதத்தை உச்ச அறங்கூற்றுமன்றம் ஏற்கவில்லையாதலால்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும் என்றும், தெரிவித்த அவர்,

அதற்கான பணி நடுவண்; அரசுக்கு உரியது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அதன்படி, காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் கருத்தறிந்த பிறகே, காவிரி மேலாண்மை வாரியத்தை நடுவண் அரசால் அமைக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை. என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படி எட்டாவது அட்டவணையில் சம அதிகாரம் உடைய மொழிகளாகக் குறிப்பிடப் பட்டுள்ள தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒன்றான ஹிந்தி மொழியை இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக தூக்கிப் பிடித்து, சட்டத்தை மதிக்காத, தேசியக் கட்சிகள் என்ற அங்கியைப் போர்த்திக் கொண்டு இயங்கும் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேச விரோதக் கட்சிகள்,

தங்களைப் போலவே, வேறுவகையாக சட்டத்தை மதிக்காத கருநாடகத்தை, கூட்டுக் களவாணிகளாக ஏற்று தங்கள் தேசியக் கட்சிகள் அங்கிக்குள் பாதுகாப்பு தரும் வகையில், நடுவண் அரசு அவர்களுக்கு கூட்டாளியாகையால், உச்ச அறங்கூற்று மன்றம், அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை.

அவர்கள் கல்வித் திட்டத்தில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக ஒப்புக் கொண்டிருப்பதால், நடுவண்;;;; அரசை ஆளும் ஹிந்தி வெறியர்களுக்கு, அவர்கள் சட்டத்தை மதிக்காத தேசத் துரோகிகள் இல்லை.

சட்டத்தை எப்போதும் மதித்து பின்பற்றுகிற தமிழகத்தை, ஹிந்தியை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தேசத் துரேகிகள் என்ற போர்வையில் அமுக்குவார்களாம்.

ஆக! தமிழக ஆட்சிக்கு மட்டும் முனைகிற கட்சிகள், நடுவண் அரசுக்கு முனையாதவரை சட்டத்தை மதிக்கிற உண்மையான தேசியம் கேலிக்கூத்தாக்கப் பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.