Show all

கதைத்தலைவியை முதன்மைப் படுத்தும் படம்! நயன்தாரா கதைத்தலைவியாக, இமைக்கா நொடிகள்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கதைத்தலைவனுக்காக எழுதப்பட்ட கதையில் தான் நயன்தாரா நடித்துள்ளார் என, ‘இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.

‘இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, மும்பை படவுலக நடிகர் அனுராக் கஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா இணையாக, சிறப்பு நடிகராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

முதலில் இந்தக் கதையை கதைத்தலைவனுக்காகத்தான் எழுதினாராம் அஜய் ஞானமுத்து. “இந்தக் கதையை எழுதும்போது இரண்டு கதைத்தலைவர்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு பாத்திரத்தை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன்.

ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட்சிகள் நையாண்டியாக இருக்கக் கூடாது என்பதில் நயன்தாரா தெளிவாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.