Show all

இன்றைக்கும் ஹிந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்று கதை விடுவதா: சித்தராமையா

ஹிந்தி பேசாத மாநிலங்களில் நடுவண் அரசு ஹிந்தி மொழியை திணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித் திணித்தால் கட்டாயம் எதிர்த்துப் போராடுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

     டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ஹிந்தி மொழியைத் திணிப்பதை கர்நாடக அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றும் நடுவண் அரசின் திட்டம் அல்ல. அத்திட்டத்திற்கு பெரும்பங்கு தொகை மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. அப்படியே நடுவண் அரசின் திட்டமென்றாலும் ஹிந்தியைத் திணிக்க வேண்டிய தேவை என்ன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டுள்ள கன்னடம், தமிழ் உள்ளிட்ட 22மொழிகளில் ஒன்றுதானே.

     ஹிந்தி, வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படுகிறது. அதற்காக ஹிந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது என்று கூறியுள்ளார்.    மேலும், ஹிந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி. எனவே நாட்டில் உள்ள அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

     சட்டம், வரலாறு தெரியாத காலத்தில் தான் வடஇந்தியத் தலைவர்கள் கதை விட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் இன்றைக்கும் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்று கதை விடுவதா? இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.

     வெங்கையா நாயுடுவின் கருத்துக்களை ஒதுபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி மொழியைத் திணிக்கும் நடுவண் அரசை எதிர்த்து போராடுவோம் என்றும், மாநில மொழியான கன்னடத்தை பாதுகாப்போம் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.

     தமிழர்கள் சார்பாக பாராட்டுகிறோம் சித்தராமையா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.