Show all

முந்தைய வரலாற்று நிகழ்வில் இருந்து இந்திய ராணுவம் பாடம் கற்க வேண்டும்: சீனா

டோங்லாங் பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய நிலைகளைத் தாக்கி சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேற விடாமல், இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

     இதையடுத்து முந்தைய வரலாற்று நிகழ்வில் இருந்து இந்திய ராணுவம் பாடம் கற்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு, நடைபெற்ற போரில் சீனாவிடம் இந்திய ராணுவம் தோற்றதை நினைவுபடுத்தும் விதமாக, சீனா இதை தெரிவித்திருந்தது.

     இதற்கு பதில் அளிக்கும் விதமாக  நடுவண் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கடந்த 1962ஐ விட தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. இன்றைய இந்தியா முற்றிலும் மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

     மேலும் அவர் கூறும் போது டோங்லாம் பகுதி பூடானுக்கு சொந்தமானது. இந்தப் பகுதியைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தியா பூடான் இடையே ஒப்பந்தம் உள்ளது. இந்தப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயல்வதாக பூடான் கூறியுள்ளது. சீனாவின் இந்தச் செயல் முற்றிலும் தவறானது. மற்ற நாட்டின் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தால் அதனை தடுப்போம் என்று அருண் ஜேட்லி கூறினார்.

     சீனாவின் அனைத்து மின்னணு, செல்பேசி கணினி உதிரி பாகங்கள், தட்டு முட்டு சாமாண்கள் அனைத்துக்கும் இந்தியாதான் சந்தையாக உள்ளது. அப்புறம் சீனாவிற்கு என்னதான் ஆனது. அல்லது வேறு உள்குத்து ஏதாவது இருக்கிறதா பொறுத்திருந்து பார்ப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.